சயாம் - பர்மா இரயில் பாதை
சயாம் - பர்மா இரயில் பாதை என்பது இரண்டாம் உலகப்போரின் போது தெற்காசிய நாடுகளை கைப்பற்ற தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் ஜப்பானியர்களால் 22 ஜுன் 1942 முதல் 17 அக்டோபர் 1943 வரையிலான காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட
இரயில் பாதையாகும்.
பாதை அமைக்க மாபெரும் திட்டம்:-
1942 ல், ஜப்பானிய படைகள் தாய்லாந்து வழியாக நுழைந்து, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றின. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மாலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. இருப்பினும், நேச நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அதனால் ஒரு மாற்றுவழியை ஜப்பானியர்கள் தேடினர். அதற்கு இரயில் பாதை அமைப்பது மட்டுமே ஒரு தீர்க்கமான வழியாக அமைந்தது. ஜப்பானியப் படைகள் ஜூன் 1942 இல் ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கின. தாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்தில் இருந்து பர்மாவில் உள்ள தான்பியுசாயாட் வரை ரயில் பாதை அமைக்கும் மாபெரும் திட்டம் இரு பிரிவுகளாக இருபுறமிருந்தும் பணிகள் தொடங்கப்பட்டது.

தொழிலாளர்கள்:-
3,30,000 தொழிலாளர்கள் மலாய்க்காரர்கள், மலேசியத் தமிழர், சயாமியர், பர்மியர்கள், பர்மியத்தமிழர்கள், பிரித்தானிய அமெரிக்க போர்க் கைதிகள் சயாம் மரண இரயில்வே கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்ட அனைவரும் கட்டாய உழைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்கள், 60,000 போர்க்கைதிகள் வலுக்கட்டாய வேலைகளைச் செய்தனர். போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல்கள், ஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் 80,000 மலாய்
மற்றும் பர்மா தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத் தொழிலாளர்களும்
16,000 போர்க்கைதிகளும் இறந்து போயினர். போரின்போது
பொது ஜப்பானியர்களால் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதால் சரியான தகவல்கள்
இதுவரை இல்லை.
![]() |
| தொழிலாளர்கள் |
![]() |
| பாதையமைக்கும் பணியில் |
கொடுமைகள்:-
மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான். முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்

குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.
![]() |
| வலிமை இழந்த தொழிலாளர்கள் |
![]() |
| பாதிக்கப்பட்ட தொழிலாளி |
பாதை பற்றிய சில தகவல்கள்:-
70 மாதங்களில்
முடிக்கவேண்டிய இப்பணியை 17 மாதங்களில்
இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து ஜாப்பானியர்கள் இப்பணியை முடித்தனர். இந்த
இரயில் பாதையானது 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்டது. மொத்தமாக 680 பாலங்களை கொண்டது.
சயாம் மரண ரயில்பாதையில் மிகவும் புகழ்பெற்றது 277ஆவது பாலம் என்று அழைக்கப்படும் குவாய் ஆற்றுப்பாலம் ஆகும். இப்பாலம் 700
அடி நீளம் கொண்டது. இந்திய தேசிய இராணுவம் இம்பாலில் போர் தொடுத்த சமயத்தில் ரயில் பாதை திட்டமிட்டபடி போடப்பட்டு விட்டது. 1943 பிப்ரவரி மாதம் முதல் மரப்பாலம் கட்டப்பட்டது. அதே பாலம் 1943 ஜூன் மாதம் இருப்புப் பாலமாக மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய விமானப்படையினர் இந்தப் பாலத்தின் மீது இரு முறை தாக்குதல்கள் மேற்கொண்டனர்.
பர்மா எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது நேதாஜி அந்த ரயில் பாதையைப் பயன்படுத்தினார்.
![]() |
| பர்மாவில் நேதாஜி ஜான்சிராணி மகளிர் படை அணியை பார்வையிடும் போது |
போர்க்குற்றங்கள்:-
சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்குற்றமாக உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கட்டுமானத்தின் தலைமை கண்காளிப்பாளராகப் பதவி வகித்த ஹிரோஷி ஆபே (Hiroshi
Abe) என்பவர் மீது தலையாயக் குற்றம் சுமத்தப்பட்டது. போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக அவருக்கு மரணதண்டன விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனை பின்னர் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
கல்லறைகளும் நினைவுச் சின்னங்களும்:-
இரண்டம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்ததும் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த கல்லறைகள் அல்லது இடுகாடுகளில் புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 415 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதைத் தொடரில் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறுஅடக்கம் செய்யப்பட்டன. அவற்றுள் 667 அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன,

காஞ்சனாபுரியில் பிரதான கல்லறை இருக்கிறது. இங்கு 6,982 போர்க்கைதிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பான்மையோர் பிரித்தானிய, ஆஸ்திரேலிய, டச்சு, கனடிய போர்க்கைதிகள் ஆகும். பிரித்தானிய படையணியில் பணிபுரிந்த 11 இந்திய போர்வீரர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். சூங் காய் எனும் இடத்தில் மற்றொரு கல்லறை இருக்கிறது. இதில் 1,750 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். மியான்மாரின் தான்பியுசாயாட் எனும் நகரில் 3,617 போர்க்கைதிகளின் கல்லறை இருக்கிறது. இந்த மூன்று கல்லறைகளையும் Commonwealth War Graves
Commission எனும் பொதுநலவாய போர்க் கல்லறைகளின் ஆணையம் பராமரித்து வருகின்றது.
![]() |
| நினைவிடம் |
நினைவு தினம்:-
இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16,000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.
மேலும் தகவல்களுக்கு:-
- இந்தப் பாலத்தைப் பற்றி 1957-இல் Bridge on the River Kwai எனும் திரைப்படம் எடுக்கப்பட்டது.
- 1993’ஆம் ஆண்டு சண்முகம் என்பவர் எழுதிய ‘’சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்’’. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.
- நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.
- https://www.youtube.com/watch?v=jNocnqRDhPI
- https://www.youtube.com/watch?v=8Zh-T8YPmOE
- https://www.youtube.com/watch?v=e4LbEKBMAi4&list=PL805426FEDB79CAC5